சென்னை விமான நிலையத்தில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு, பிரதமரும், உள்துறை அமைச்சரும் என்ன சொன்னார்கள் என்பதுதான் முக்கியம். அண்ணாமலைக்கு எதுவும் தெரியாது, கட்சி கொடுத்த வேலையை மட்டுமே அவர் செய்கிறார். அவர் தனது மாநிலத்திற்கு விசுவாசத்தைக் காட்டவில்லை, தனது கட்சிக்கு விசுவாசத்தைக் காட்டுகிறார்" என்றார்.