தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நேற்று (அக். 15) கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் தலைநகர் சென்னையில் விடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இந்த நிலையில் சென்னையில் நேற்று பெய்த அதீத கனமழை இன்று (அக். 16) இருக்காது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார். மேகக் கூட்டங்கள் வடக்கு நோக்கி நகர்ந்ததால் சென்னையில் அதீத கனமழை வராது என கூறிய அவர் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்றார்.