மன்னார்குடியில் நடைபெற்ற கராத்தே தேர்வு

84பார்த்தது
கராத்தே தகுதி தேர்வு மன்னார்குடியில் நடைபெற்றது. மன்னார்குடியில் உள்ள இஸ்ஷின்ரியு கராத்தே பள்ளி சார்பில் கராத்தே பயிற்சியில் 5 முதல் 20 வயதுடையோர் பயிற்சி பெற்று வந்தனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் கராத்தே தேர்வு இன்று தரணி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை தரணி நிறுவனங்களின் தலைவர் எஸ். காமராஜ் தொடங்கிவைத்தார். தொடர் ஓட்டம், உடற்பயிற்சி, கட்டா பயிற்சி, கைகளால் தாக்குதல், தடுத்தல் முறை, குமித்தே போன்ற தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. 

5 முதல் 20 வயதுடைய 70 மாணவ மாணவிகள் பங்கேற்று கராத்தே பயிற்சிகளை செய்தனர். சென்சாய்கள் உள்ளிக்கோட்டை சேகர், மற்றும் குமரேசன் ஆகியோர் மாணவர்களை தேர்வு செய்தனர். கராத்தே தேர்வில் பங்கேற்ற 70 மாணவர்களில் 67 பேர் தேர்ச்சி பெற்றனர். மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, பழுப்பு என 6 பட்டைகளுக்கான தகுதி தேர்வு நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் மன்னார்குடி சார்பு நீதிபதி எஸ். முத்துராமன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மஞ்சள் பச்சை, நீலம் என 6 வகையான பட்டைகளை வழங்கி பாராட்டினார். கராத்தே மாஸ்டர் கியோஷே ராஜகோபால் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் சென்சாய்கள் சுதர்சன், ஆரத்தி, ராஜேஷ், காரிக்கோட்டை அசோக், மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி