விநாயகர் சதுர்த்தியையொட்டி மன்னார்குடியில் 34 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று இந்து முன்னணி சார்பில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. நேற்று மாலை மன்னார்குடி தேரடியில் நடைபெற்ற ஊர்வல தொடக்க நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
விநாயகர் ஊர்வலத்தில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 34 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்த விநாயகர் சிலைகள் நேற்று மன்னார்குடி தேரடி பகுதிக்கு எடுத்துவரப்பட்டு பின்னர் ஊர்வலமாக பெரிய கடை வீதி, காந்தி ரோடு வழியாக கீழ பாலம் பாமணி ஆற்றில் சென்றடைந்து அங்கு பாமணி ஆற்றில் கரைக்கப்பட்டது. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி நேற்று மாலை தொடங்கிய ஊர்வலத்தில் பாதுகாப்பு பணிக்காக ஏடிஎஸ்பி வெள்ளைதுரை, மன்னார்குடி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் ஆரோக்கியராஜ்
தலைமையில் 250 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வழிநெடுக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அவசர உதவிக்கென தீயணைப்பு வாகனமும், மருத்துவ முதலுதவி சிகிச்சை வாகனமும் ஊர்வலத்தில் உடன் சென்றது.