பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
காசா பகுதியில் ரபா எல்லை பகுதியில் தங்கி இருந்த பொதுமக்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். இதேபோல் நேற்று இரவு 6000 பேர் தங்கி இருந்த யு. என். ஆர். டபிள்யு. ஏ அமைப்பின் பள்ளிக்கூடத்தில் குண்டுகளை வீசி இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 60 பேர் கொல்லப்பட்டனர் அவர்களில் சரி பாதி சிறுவர் சிறுமிகள்.
சிறுவர்கள் என்றும் பார்க்காமல் கொன்று குவிக்கும் இஸ்ரேலிய இராணுவத்தை கண்டித்து கூத்தாநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுதந்திரமான பாலஸ்தீன நாட்டை உருவாக்க உலக நாடுகள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் இஸ்ரேலிடமிருந்து விடுதலை பெற்ற நாடாக பாலஸ்தீனத்தை அறிவிக்க இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் அத் அமைப்பின் மாநில செயலாளர் அல் அமீன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண் ஆண்கள் சிறுவர்கள் என ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.