மன்னார்குடியில் இரத்ததானம் முகாம்

72பார்த்தது
மன்னார்குடியில் இரத்ததானம் முகாம்
மன்னார்குடியில் இரத்ததானம் முகாம்

மன்னார்குடி மனித நேய மக்கள் கட்சியின் 16ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மன்னார்குடி நகர அலுவலகத்தில் கொடியேற்று விழா மற்றும் மாபெரும் இரத்ததானம் முகாம் நகர தலைவர் பஷீர் அகமது தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் முபாரக் கொடியேற்றி வைத்து இரத்ததானம் முகாமை துவக்கி வைத்தார். மன்னார்குடி தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி