திருவள்ளூர் அடுத்த கொசவம்பாளையம் பகுதியில் கண்டெய்னர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒரு வாலிபர் பலி: மற்றவருக்கு பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் புதுமாவிலகை கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் மகன் தசரதன் (23). இவர் இவரது நண்பருடன் வேலைக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொசவன்பாளையம் வழியாக திருவள்ளூர் திருத்தணி மெயின் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி மோதி தசரதன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிர் இழந்தார். அவருடன் வந்த அவரது நண்பருக்கு வலது காலில் எலும்பு முறிவும் தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகவும் பலத்த காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காகவும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கண்டைனர் லாரி ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்திவிட்டு சிறிது தூரம் சென்று வாகனத்தை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிச்சென்ற லாரி ஓட்டுனரை தேடி வருகின்றது.