கிருமி நாசினி தெளித்து கணக்கெடுக்கும் கால்நடை மருத்துவர்.

85பார்த்தது
கிருமி நாசினி தெளித்து கணக்கெடுக்கும் கால்நடை மருத்துவர்.
திருத்தணி அருகே தமிழக எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களை பறவை காய்ச்சல் எதிரொளியாக கிருமி நாசினி தெளித்து கணக்கெடுக்கும் கால்நடை மருத்துவர் குழு.

திருத்தணி -பிப்ரவரி-20

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ளது பொன் பாடி சோதனை சாவடி
இந்த பகுதி சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஆகும்

வட மாநிலம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த பகுதி வழியாக தமிழக எல்லைக்கு உள்ளே வருகிறது இப்படி வரும் வாகனங்கள் அனைத்திற்கும்

ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவல் எதிரொலி காரணமாக

மேற்கண்ட பகுதியில் வரும் வாகனங்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் தாமோதரன், கால்நடை மருத்துவர் பெமினா பானு ஆகியோர்கள் கொண்ட குழு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு அதன் பிறகு தமிழக பகுதிக்கு வாகனங்களை அனுமதித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி