தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச். 01) தனது 72வது பிறந்த நாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணா வழியில் அயராது உழைப்போம்.. இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என கோஷமிட அவருடன் இருந்தவர்களும் கைகளை உயர்த்தி கோஷமிட்டனர்.