தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி விபத்து நடந்த நிலையில், 5 பேர் சேறு சகதியில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். அதி நவீன சிறிய ரக டிரோன் மூலம் இதனை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ராணுவம், கடற்படை, தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் இரவு பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்ட போதும் யாரையும் உயிருடன் மீட்கமுடியவில்லை.