நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு, 750 ஏக்கர் பரப்பளவில் வெள்ளைப் பூண்டு பயிரிடப்பட்டது. இந்த பூண்டு மருத்துவ குணங்கள், தனித்துவமான சுவை காரணமாக, வெளி மாநிலங்களில் அதிக தேவை உள்ளது. கடந்தாண்டு இறுதியில் பூண்டு ஒரு கிலோ ரூ.500 வரை விற்பனையானது. இந்த நிலையில் கடந்த 20 நாட்களில் விலை படிப்படியாக குறைந்து, தற்போது மேட்டுப்பாளையம் சந்தைகளில் கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை மட்டுமே விற்பனையாகிறது. உற்பத்தி அதிகரித்த போதிலும், திடீர் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.