குடும்பத்தை அறையில் பூட்டி மர்ம நபர்கள் கைவரிசை

63பார்த்தது
குடும்பத்தை அறையில் பூட்டி மர்ம நபர்கள் கைவரிசை
திருவேற்காடு அடுத்த மேலயனம்பாக்கம், ஈடன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரோ பிரின்ஸ் ஜெரால்டு, வயது 35; தனியார் நிறுவன இன்ஜினியர். இவருக்கு எஸ்தர்கிரேஷ் என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று (செப்.4) அதிகாலை, வீட்டின் ஒரு அறையில் இவர்கள் துாங்கிய போது, பின்பக்க கதவு தாழ்ப்பாளை உடைத்து, மர்ம நபர்கள் இருவர் வீட்டில் புகுந்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த ஜெரால்டு குடும்பத்தினரை, அறைக்குள் வைத்து தாழ்ப்பாள் போட்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர்.

அருகில் வசிப்போரை தொடர்பு கொண்டு கதவை திறக்க வைத்த ஜெரால்டு, வீட்டில் சோதனையிட்டார். இதில், 15 சவரன் நகை, பைக், லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின்படி, திருவேற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.