திருவள்ளுர் நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று (13. 08. 2024) முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலை திறப்பு விழாவில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு கூடுதல் தீருதவியாக ஆறு நபர்களுக்கு அரசுப் பணி நியமன ஆணையினை மாண்புமிகு நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் மற்றும் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு. ஆர். காந்தி அவர்கள் வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். த. பிரபுசங்கர். இ. ஆ. ப. அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. வி. ஜி. இராஜேந்திரன் (திருவள்ளூர்), திரு. எஸ். சந்திரன் (திருத்தணி), ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு. ச. கந்தசாமி. இ. ஆ. ப ஆகியோர் கலந்துக்கொண்டனர்.