திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அடுத்த மோரை ஊராட்சி உட்பட்ட
புதிய கன்னியம்மன் நகர், பகுதியில் சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக
2500 குடும்பங்களுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வருகின்றனர்,
இந்நிலையில்
அப்பகுதியில் உள்ள மக்கள் பல ஆண்டுகளாக வருவாய் துறை சார்பிலும், மாவட்ட
ஆட்சியரிடமும், பலமுறை மனுக்கள் அளித்தோம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை தெரிவிக்கின்றனர்,
கடந்த 2009 ஆம் ஆண்டு மாநில அரசால் புதிய கன்னியம்மன் நகரில் சர்வே எண்கள் (289, 294/6, 294/7) A, B, C, D பிளாக் என இடம் ஒதுக்கப்பட்டு அதில் 2500 குடும்பங்கள் வீடு கட்டி 15 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும், அந்த வீடுகளுக்கு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு போன்ற வரிசெலுத்தி வருவதாகவும்,
இந்நிலையில் கட்டிய வீடுகளுக்கு
வீட்டுமனை பட்டா இல்லாததால்
தங்களுடைய பிள்ளைகளுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும்
கல்வி கடன்கள் போன்ற இலவச சலுகைகளை பெறுவதில் சிரமம் உள்ளதாக மனவேதனையுடன் தெரிவிக்கின்றனர்,
மேலும் சொந்த இடத்தில் அகதிகள் போல் வாழ்ந்து வருவதாகவும், எங்களுடைய நிலையை மாவட்ட ஆட்சியர் புரிந்து கொண்டு
எங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்துள்ளனர்.