மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைத்தது சட்டவிரோதம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில் நீதிமன்ற தீர்ப்பு குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறுகையில், "திமுக தொடுக்கும் அனைத்து வழக்கிலும் வெற்றி பெறுகிறது. இந்த தீர்ப்புக்கு பிறகாவது ஆளுநர் திருந்தி தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். அதை தான் உச்ச நீதிமன்றம் தலையில் குட்டுவது போல சொல்லியுள்ளது” என்றார்.