IPL 18வது சீசனில் இன்று KKR Vs LSG அணிகள் மோதுகின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்ட்னஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி நண்பகல் 03:30 க்கு தொடங்குகிறது. இதுவரை 4 போட்டிகளை எதிர்கொண்டு 2 போட்டிகளில் வெற்றி அடைந்துள்ள இரண்டு அணிகளும், ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 5 மற்றும் 6 வது இடத்தில் இருக்கின்றன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற இரண்டு அணிகளும் முனைப்புடன் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.