IPL 18வது சீசனில் இன்று PBKS Vs CSK அணிகள் மோதுகின்றன. பஞ்சாபின் முல்லன்பூர் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் 22 வது போட்டி இரவு 07:30 க்கு தொடங்குகிறது. இதுவரை 3 போட்டியை எதிர்கொண்டு 2ல் வெற்றி என புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் 4 வது இடத்தில் இருக்கிறது. முதல் போட்டிக்கு பின் ஹாட்ரிக் தோல்வியை எதிர்கொண்டுள்ள சென்னை புள்ளிப்பட்டியலில் 9 வது இடத்தில் இருக்கிறது. விரக்தியில் இருக்கும் சென்னை ரசிகர்களுக்கு ஆறுதல் கிடைக்குமா? என இன்று இரவு தெரிந்துவிடும்.