சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்தது சட்டவிரோதமானது என்று அந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதாவும் ஒன்று. தீர்ப்புக்கு பின்னர் ஆளுநர் ரவி பல்கலைக்கழகங்கள் வேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் வேந்தரானார்.