நூறு வயதை கடந்த மூதாட்டிக்கு கேக் வெட்டி கொண்டாட்டம்

66பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமம், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அன்னம்மாள், இவரது கணவர் மறைந்த ஓய்வு பெற்ற சாலை பணியாளர், இந்நிலையில் நூறு வயதை எட்டிய அன்னம்மாள், புல்லரம்பாக்கம் கிராமத்திலேயே மிகவும் மூத்த குடிமக்களாக அப்பகுதி கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றனர்,

பெற்றோர்களை பிள்ளைகள் கூட்டுக் குடும்பத்தில் வைத்து பராமரிக்க முடியாமல் அவர்களை ஆதரவற்றோர் இல்லங்களிலும், ஆசிரமங்களிலும், விட்டு செல்வதை நாம் பார்க்கிறோம், ஆனால் இங்கே புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் அன்னமாலின் பிள்ளைகளோ அவர்களின் குடும்பத்துடன் அவர்களை பாதுகாத்து பராமரித்து வருகின்றனர், இந்நிலையில் அன்னம்மாள் நூறு வயது வரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்த நிலையில் ஒட்டுமொத்த கிராமத்திற்கும் இவர் ஒரு முன்மாதிரியாக விளங்கி வருகின்றன.

அன்னம்மாள் பாட்டியின் நூறு வயது பூர்த்தி அடைந்த நிலையில் அவரை கௌரவிக்கும்
விதத்தில் அவரது நூறாவது பிறந்தநாளை தனியார் திருமண மண்டபத்தில் கிராம மக்கள் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு கொடுத்து கேக் வெட்டி கறி விருந்து அளித்து உற்சாகமாக கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி