இந்த போட்டியில் வென்றது மூலம் எனது கனவு நிறைவேறி உள்ளது

66பார்த்தது
இந்திய கிராண்ட் மாஸ்டரான டி. குகேஷ், கனடாவின் டொராண்டோ நகரில் சமீபத்தில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பட்டம் வென்றுள்ளதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்வதற்கான ஆட்டத்தில் குகேஷ், சீனாவின் டிங் லிரனுடன் இந்த ஆண்டு இறுதியில் மோத உள்ளார். இந்நிலையில் முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் குகேஷுக்கு பள்ளி மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு தலைப்பாகை அணிவித்து கௌரவித்தனர். இதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கனவு நிறைவேறி உள்ளது. இந்த போட்டி எனக்கு சிறப்பு வாய்ந்த போட்டியாகும். எனக்கு மிகவும் ஆதரவளித்த அரசுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து வரக்கூடிய போட்டிகளுக்கு தயாராக கால அவகாசம் உள்ளது. எனது குழுவுடன் இணைந்து அனைத்தும் முயன்று வெற்றி பெற உழைப்பேன் என கூறினார்.
இந்த கால இளைஞர்களிடம் செஸ் விளையாட்டு மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும் மிக வலுவான வீரர்கள் உருவாகியுள்ளன. என்னுடைய வெற்றி மற்றவர்களுக்கு ஊக்கமாக இருக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
இந்திய சிறுவர்கள் செஸ் விளையாட்டை பெருமளவில் கற்க துவங்கினாள் எனக்கு அது பெருமைக்குரிய விஷயமாக இருக்கும் என பெருமிதம் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி