200கிலோ குட்கா மற்றும் 2லட்சம் பணம் பறிமுதல்: 2பேர் கைது

62பார்த்தது
மாங்காடு அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்கா மற்றும் 2 லட்சம் பணம் பறிமுதல், 2 பேர் கைது



பூந்தமல்லி அடுத்த மாங்காடு அருகே பெரிய கொளுத்துவாஞ்சேரி தனலட்சுமி நகர் பகுதியில் ஒரு வீட்டில் ரகசியமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற பொருட்கள் இருப்பதாக மாங்காடு காவல் ஆய்வாளர் முத்துராமலிங்கத்திற்கு ரகசிய தகவல் வந்தது அதனை தொடர்ந்து அந்த வீட்டிற்கு சென்று சோதனை செய்ததில் வெளி மாநிலத்திலிருந்து மூட்டை மூட்டையாக கடத்தி வந்து இந்த பகுதிகளில் விற்பனை செய்ய வைத்திருந்த சுமார் 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக கோபால் வயது [33] மற்றும் செந்தில்குமார் வயது [40]என்ற இருவரையும் மாங்காடு போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இருவரிடம் இருந்து 2 லட்சம் ரொக்க பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த குட்கா கடத்தலுக்கு வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி