திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் டி. எஸ். பி அலுவலகம் அருகில் பழைய கமலா தியேட்டர் எதிரில் டீக்கடை நடத்தி வரும் மணிகண்டன் என்பவர்
இவரது மனைவி எழில் மற்றும் நான்கு குழந்தைகளுடன் திருச்சிக்கு ஊருக்கு சென்றுள்ளார்
மணிகண்டன் இவரது முதல் மகள் திருவள்ளூர் கல்லூரி படிக்கும் கலைச்செல்வி வயது (18) இவர் ஊருக்குச் சென்ற தாய் தந்தை தன்னை அழித்து செல்லவில்லை என்று விரக்தியில்
வீட்டில் இருந்துள்ளார் திடீரென்று இவர்களது வீட்டில் மாடியில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இது குறித்து திருத்தணி போலீசார் விரைந்து வந்து கல்லூரி மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை செய்ய வந்தனர்
கல்லூரி மாணவியின் உறவினர்கள் அவர்களது தாய்- தந்தையர் ஊரிலிருந்து வந்தவுடன் அவர்களது மகள் முகத்தை பார்க்க வேண்டும் அதனால் பிரேதத்தை எடுத்துச் செல்லக்கூடாது என்று இரண்டு மணி நேரமாக காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
அவர்கள் தாய் -தந்தை வந்தவுடன் அரசு மருத்துவமனையில் பிரேதம் அறையில் இருந்து அவர்களது மகளை காண்பிக்கிறோம் என்று கூறி உறுதியளித்து கல்லூரி மாணவியின் பிரேதத்தை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்
இந்த சம்பவம் குறித்து திருத்தணி போலீசார் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.