திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த வாகனம் திடீரென சாலையில் பழுதாகி சாலை நடுவே நின்று போனது.
மிக நீளமான லாரியான டிரக் லாரி நின்று போனதால் திருத்தணியில் இருந்து சென்னை, பூந்தமல்லி திருவள்ளூர், மற்றும் திருப்பதி, சித்தூர், வேலூர், ராணிப்பேட்டை, போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் இரண்டு மணி நேரமாக செல்ல முடியாமல் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது.
மேலும் மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அனைவரும் குரூப் 4 அரசு தேர்வுக்கு பாதுகாப்பு பணிக்கு சென்றதால் மிகக் குறைந்த போலீசார் இருந்ததால் இந்த போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய முடியாமல் திணறிப் போயினர்.
2 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் ஜே. சி. பி எந்திம் மூலம் சாலை நடுவே பழுதாகி நின்ற லாரியை அகற்றினர். இதனையடுத்து போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள் மெல்ல செல்லத் தொடங்கியது.