பேருந்து நிலையத்தில் பயணிகள் போதிய இடம் இல்லாமல் அவதி

1901பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, காளாஸ்திரி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லக்கூடிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நிற்பதற்கும் தங்குவதற்கும் போதிய இட வசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

பேருந்து நிலைய வளாகத்தில் பழக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் வைத்திருப்பதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும் மழையிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று பேருந்து நிலையத்தில் பயணி ஒருவர் அமர்ந்திருப்பதால் வியாபாரம் ஆகவில்லை எனக்கூறி இரண்டு பழ வியாபாரிகள் அந்த பயணியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில் பழ வியாபாரிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட கடைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் இருக்கும்போது கடையை எடுப்பது போல் எடுத்து ஓரம் வைத்துவிட்டு அவர்கள் சென்ற பிறகு மீண்டும் கடையை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி