'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, தற்போது துணை முதல்-அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து கூறினார். தொடர்ந்து பேசிய சூர்யா, இன்று கட்சியின் முதல் மாநாட்டை நடத்தும் விஜய்க்கு மறைமுகமாக வாழ்த்து கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், "இன்னொரு நண்பர் இருக்காரு. ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்காரு. அவரோட வரவு நல்வரவாக இருக்கட்டும்.."என்றார்.