திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்களை வழங்கி செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கஞ்சா கருப்பு போரூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லை என்று தன்னுடைய மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்து பேட்டியளித்து பெரிதாக்க பார்க்கிறார் இதற்கான விளக்கத்தை ஏற்கனவே அளித்துள்ளோம் போதிய மருத்துவர்கள் அங்கு உள்ளனர் என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் விளக்கம் அளித்தார் மேலும் கஞ்சா கருப்பு என்று கூறுவதற்கு தன்னால் முடியாது என்றும் வேறு ஏதாவது கருப்பு என்று கூறிக் கொள்கிறேன் என்று நகைச்சுவையாக கூறி அவர் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் அல்லது விளைவுகளை சந்திப்பார் என்று தெரிவித்த அமைச்சர் நேற்று விடுமுறை நாள் என்ற போதிலும் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் போதிய மருத்துவர்கள் பணியில் இருந்தார்கள் என்று கஞ்சா கருப்புவின் குற்றச்சாட்டிற்கு சென்னை பெருநகர மாநகராட்சியின் மேயர் பிரியா சமூக வலைதளங்களிலே விளக்கம் அளித்துள்ளார் என்றும் இந்தப் பிரச்சினையை தான் முற்றுப்புள்ளி வைத்து இத்தோடு முடித்துக் கொள்ள விரும்புவதாக மா. சுபிரமணியன் தெரிவித்தார்