லோக்சபாவில் உள்துறை அமைச்சகம் அளித்துள்ள தரவுகளின்படி, தமிழகத்தில் 2020 மற்றும் 2022க்கு இடையில் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு SC/ST எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களின் கீழ் மொத்தம் 1,274 வழக்குகளும், 2021ல் 1,377 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 15,368 வழக்குகளுடன் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது, 2020ல் 12,714 வழக்குகள் மற்றும் 2021ல் 13,146 வழக்குகள் பதிவாகியுள்ளன.