அதிமுக உட்கட்சி விவகாரத்தை விசாரிப்பது தேர்தல் ஆணையத்தின் வேலை அல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். "குமாஸ்தா வேலையை மட்டுமே தேர்தல் ஆணையம் பார்க்க வேண்டும், அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்தல் ஆணையம் முறைகேடாக பயன்படுத்துகிறது. கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை" என்றார்.