மேற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள அம்தாலி காவல் நிலையப் பகுதியைச் சேர்ந்தவர் ஷ்யாமல்தாஸ். இவரது மனைவி ஸ்வப்னா. கடந்த திங்கள்கிழமை (பிப்.10) இரவு கணவன் மனைவி ஆகியோருக்கு ஏற்பட்ட தகராறின்போது கூர்மையான ஆயுதத்தால் ஸ்வப்னா தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனை யாரிடமும் கூறாமல் இரவு முழுவதும் பிணத்துடன் இருந்துள்ளார். பின்னர் மறுநாள் மதியம் 1:30 மணியளவில் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஸ்வப்னாவின் உடலை மீட்டு விசாரணை நடைத்துவருகின்றனர்.