நீலகிரி மாவட்டத்தில் சாலையில் சென்றவர் மீது காட்டெருமை பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, சாலையை கடக்க முயன்ற காட்டெருமை ஒன்று திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கிழே விழந்த இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்ட அருகில் இருந்தவர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.