சேலம் மாவட்டம், வீரகனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவா (32). திருமணம் ஆகாத இவர் குடும்ப பிரச்னை காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து வேலையை செய்துகொண்டு பஸ் ஸ்டாண்டில் தங்கிவந்துள்ளார். அப்போது யாசகம் பெறும் 40 வயது பெண்ணுடன் சிவாவிற்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்த நிலையில் அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். கருவை கலைக்க சிவாவிடம் வாங்கிய ரூ.13 ஆயிரம் குறித்து இருவருக்கும் தகராறு ஏற்படவே அப்பெண்ணை சிவா கொலை செய்துள்ளார். தற்போது சிவாவை போலீசார் கைது செய்துள்ளனர்.