கூட்டுறவு பண்டக சாலைகளில் வீடுகளுக்கு 2 சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. "அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், இரு கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்கள் 1800 2333 555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சேவை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்" என கூறப்பட்டுள்ளது.