"நாங்க போட்ட பிச்சை” - நகர்மன்ற தலைவருடன் கவுன்சிலர்கள் ஆவேசம்

83பார்த்தது
தென்காசி: செங்கோட்டை நகராட்சியில் இன்று (பிப்.,12) நகர்மன்ற தலைவர் ராமலக்ஷ்மி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக கருத்துக்கு எதிராக அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தினால், நகர்மன்ற தலைவர் ராமலக்ஷ்மி, கூட்டத்தை விட்டு வெளியேறினார். அங்கிருந்த கவுன்சிலர்கள் அவரை வழிமறித்து, “உங்க பதவி நாங்க போட்ட பிச்சை” என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு ராமலக்ஷ்மி வெளியேறியதாக கூறப்படுகிறது.

நன்றி: polimernews

தொடர்புடைய செய்தி