தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு, சௌமியா அன்புமணி கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அவர் கூறியதாவது, “திருநங்கையர், திருநம்பியர், இடைப்பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் ஆகியோருக்கான சமூகநீதி உள்ளிட்ட உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். அதற்கான கொள்கைகளை வகுக்கும்போது தனித்தனியாக வகுக்க வேண்டும். அவர்கள், சமூகப் புறக்கணிப்புகளையும், அவமதிப்புகளையும் எதிர்கொள்கின்றனர்” என வலியுறுத்தியுள்ளார்.