வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுத்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கவே செய்கின்றன. வாழைப்பழம் அதிகமாக சாப்பிடுவது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவைத் தூண்டுகிறது, அதாவது, அதிகம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தாகவும் மாறலாம். வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.