திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டனர் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலக அரசு உறுதிமொழி குழு
திருவள்ளூர் மாவட்டம்
திருத்தணி முருகன் கோயிலில் தமிழ்நாடு சட்டமன்றம் பேரவைச் செயலகம் அரசு உறுதிமொழி குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் மற்றும் குழு உறுப்பினர்கள்-சட்டமன்ற உறுப்பினர்கள் -1-நல்ல தம்பி, 2-அருள், 3-எம். கே. மோகன், 4-பூமிநாதன், 5-ஆனந்த் ரமேஷ், ஆகியோர்கள் சாமி தரிசனம் செய்தனர் இவர்களுக்கு மாலை மற்றும் பிரசாதங்கள் திருக்கோயில் நிர்வாகம் வழங்கினார்கள் மேலும் கோயிலில் யானை மண்டபம் ஆய்வு செய்து மேலும் யானை ஏன் வழங்கவில்லை என்பதற்கான முழு வனத்துறை சட்டம் குறித்தும் இதற்கான விளக்கங்களை கோயில் நிர்வாகத்திலும் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்தும் திருக்கோவில் நிர்வாகத்திடம் இந்த குழு ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை செய்தனர்.