வேனில் கடத்தி வரப்பட்ட 709 கிலோ எடை கொண்ட குட்கா பறிமுதல்

63பார்த்தது
திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரையன் பேரில் போலீசார் நேற்று(செப்.10) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு போதை பொருள் கடத்தப்படுவதாக  எஸ்.பி க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை எஸ். ஐ குமார் தலைமையில் போலீசார் கனகம்மாசத்திரம் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நல்லாட்டூர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டினர். அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் சாக்கு பை மூட்டைகளில் அடைத்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு எடுத்துச் சென்ற சுமார் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 709 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்தியது உறுதிப்படுத்தப்பட்டு அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி