ஏரி உடைந்ததால் விவசாய நிலங்கள் வறட்சி ஏற்படும் சூழல்

73பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா
திருவாலங்காடு ஒன்றியம் சின்னமண்டலி கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது 50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் 60% ஏரி தண்ணீர் நிரம்பி இருந்தது
இந்த ஏரியின் கட வாசல் சிமெண்ட் பகுதியை உடைத்த மர்ம நபர்கள் இதனால் ஏரியிலிருந்து முப்பது மணி நேரத்திற்கு மேலாக ஏரி தண்ணீர் வெளியேறி வீணாக செல்கிறது இதனை தடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு இந்த பகுதி விவசாயிகள் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க முன் வராத பொதுப்பணித்துறை அதிகாரிகள் என்று விவசாயிகள் குற்றச்சாட்டு
வீணாக முப்பது மணி நேரமாக ஏரி தண்ணீர் வெளியேறி வருவதால் இந்த ஏரியை நம்பி விவசாயம் செய்து வரும் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்கள் வறண்டு போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் குற்றச்சாற்று முன் வைத்துள்ளனர்
உடனடியாக ஏரியின் கட வாசல் உடைப்பு சரி செய்ய வேண்டும், இதனை உடைத்த மர்ம நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், மெத்தனமாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு இந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி