திருத்தணி அடுத்த வி. கே. ஆர். புரம் மோசூர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமூர்த்தி மகள் சுமதி, 22. இவருக்கும் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வசிக்கும் சரவணகுமார், 27 என்பவருக்கும் கடந்தாண்டு பிப். , 1 ம் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, சுமதிக்கு, 15 சவரன் நகைகள், சரவணகுமாருக்கு, 5 சவரன் செயின் மற்றும் 80, 000 ரூபாய் வரதட்சணையாக சுமதியின் பெற்றோர் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சரவணகுமார், அவரது சகோதரர் ராஜசேகர், தாய், கஸ்துாரி ஆகியோர் கூடுதலாக நகை மற்றும் 5 லட்சம் ரூபாய் கேட்டு சுமதியை அடித்து துன்புறுத்தியுள்ளனர்.
சுமதி கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி அனைத்து மகளிர் நிலைய போலீசார் வழக்கு பதிந்து வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய சரவணகுமாரை தேடி வருகின்றனர்.