பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது, குட்கா எடுத்து வந்த காரை போலீஸ் நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டபோது குட்காவை கடத்தி வந்தது திருநின்றவூரை சேர்ந்த உதயகுமார் வாலாஜாபாத்தை சேர்ந்த மணிகண்டன் என்பது தெரியவந்தது இருவரும் பெங்களூரில் இருந்து காரில் குட்காவை எடுத்து வந்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது ஒரு கார், 160கிலோ குட்காவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.