பத்ம புராணத்தின் படி சிவனுக்கு அசோக சுந்தரி என்கிற மகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவரே காளி என வடிவம் கொண்டதாக அப்பர் மற்றும் நம்பியாண்டார் நம்பி தங்களது பாடல்களில் வர்ணித்துள்ளனர். சிவபெருமானின் ஒளியிலிருந்து பிறந்த மற்றொருவர் ஜோதி என அழைக்கப்படுகிறார். இவர் ஜூவாலாமுகி என்கிற பெயரில் வழிபடப்படுகிறார். பாம்புகளின் கடவுள் ஆன கத்ரு செதுக்கிய சிலையின் மீது சிவனின் உயிரணுக்கள் விழுந்ததால் பிறந்தவரே பாற்கடலை கடைய பயன்பட்ட வாசுகி என கூறப்படுகிறது.