திருவள்ளூர் மாவட்டம்,
பூந்தமல்லி அருகே போரூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா நகரை சேர்ந்தவர் கார்த்திக்(36), தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது மனைவி சென்று பார்த்த போது கார்த்திக் தூக்கு போட்டு இறந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து போரூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், அவர் இறப்பதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதில் குறைவான இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு இந்த சூழ்நிலையில் தன்னால் வாழ முடியவில்லை. எனவே நான் செல்கிறேன் என எழுதி வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கார்த்திக் கடன் வாங்கி இருந்ததாகவும் அதனை திருப்பி செலுத்துவதில் கடும் சிரமத்தில் இருந்து வந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வந்தவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.