அதிக புரதத்தை உட்கொள்வதால் சிறுநீரகத்தின் மீது அழுத்தம் ஏற்படும். இதனால் சிறுநீரக கற்கள் உருவாகும். புரதம் உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு, காலப்போக்கில் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 70 கிலோ எடையுள்ள ஒருவர், ஒரு நாளைக்கு 52.5 கிராம் புரதத்தை உண்ண வேண்டும். எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொருவரும் உள்ளங்கை அளவுக்கு புரதத்தை உள்கொள்ளலாம். சராசரியாக, ஆண்கள் 55 கிராம் மற்றும் பெண்கள் 45 கிராம் புரதத்தை தினமும் சாப்பிட வேண்டும்.