ஸ்வீடன் நாட்டின் டெலிகாம் தயாரிப்பாளரான எரிக்சன், இந்தியாவில் ஏர்டெல் 5ஜி ஸ்டான்டலோன் நெட்வொர்க்கிற்கு மாறுவதை இலக்காக கொண்டு முக்கிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. எரிக்சன் உடனான நீடித்த கூட்டாண்மை ஒரு அற்புதமான புதிய கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஏர்டெல் 5G ஸ்டாண்டலோனுக்கு மாறுவதற்கு எரிக்சனின் முக்கிய பங்காற்றுகிறது. வாடிக்கையாளர்களுக்கு புதுமையான மற்றும் வேறுபட்ட சேவைகளை வழங்க இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்துள்ளன.