பள்ளி கட்டட இடிபாடுகளால் மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி.

56பார்த்தது
பள்ளி கட்டட இடிபாடுகளால் மாணவர் பாதுகாப்பு கேள்விக்குறி.
"பள்ளிப்பட்டு ஒன்றியம், சூரராஜபட்டடையில், நகரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது, அரசு தொடக்கப் பள்ளி. இந்த பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டது.


இடிக்கப்பட்ட சுற்றுச்சுவரின் இடிபாடுகள், அதே பள்ளி வளாகத்தில் கொட்டப்பட்டன.

இதனால், மாணவர்கள் பள்ளி வளாகத்தில் நடமாட சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும், புதிய சுற்றுச்சுவர் கட்டப்படாததால், பாதுகாப்பும் கேள்விக்குறியாக உள்ளது.

பள்ளிப்பட்டில் இருந்து நகரி செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், இந்த வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

மேலும், இதே பகுதியில், அரசு கருவூலம், பத்திரப்பதிவு அலுவலகம், காவல் நிலையம் என, பள்ளிப்பட்டு நகரின் முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

எனவே, மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் உடனடியாக கட்டவும், பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ள கட்டட இடிபாடுகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி