சேரும் சகதியுமான செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலை

55பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் அலமாதி, எடப்பாளையம் ஆகிய 2 இடங்களில் திருவள்ளூர் செங்குன்றம் நெடுஞ்சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதால் சாலையின் குறுக்கே 2 தரைப்பாளங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு ஆமை வேகத்தில் பணி நடைபெறுவதால் திருவள்ளூரில் இருந்து செங்குன்றம் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

குறிப்பாக அலமாதி, வானியன்சத்திரம், காந்தி நகர், பம்மது குளம் பகுதிகளில் உள்ள தனியார் குடோன்களில் வெங்காயம், பூண்டு, மின்விசிறி, குளிர்சாதன பெட்டி, அரிசி பருப்பு, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் இந்த சாலையில் அதிகளவில் செல்கின்றன. இதனிடையே இப்பகுதியில் மந்தகதியில் நடைபெறும் சாலை பணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பள்ளி மாணவர்கள், மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் அன்றாட பணிகளுக்கு செல்லும் ஆட்டோ மினி வேன்கள் கார்களில் பயணிப்போர் என சேரும் சகதியான சாலையில் பயணிக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சாலை பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் துரிதப்படுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி