பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

67பார்த்தது
பழவேற்காடு காட்டுப்பள்ளி சாலை
கடந்த பல ஆண்டுகளாக
சீரமைக்கப்படாமல் 20கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் அவதி உரிய நடவடிக்கை எடுக்க கோரி கவுன்சிலர்கள் கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்


திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம் ஒன்றிய குழு தலைவர் ரவி தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலையில் இன்று நடைபெற்றது இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பொதுமக்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பணி வழங்க வேண்டும் நீண்ட தூரத்தில் பணி வழங்கக் கூடாது என்றும்
இதனால் வயதான முதியவர்கள் பெண்கள் கடும் சிரமம் அடைவதாகவும் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்து பயனாளர்களுக்கும் வீடுகள் உடனுக்குடன் கட்டித் தர வேண்டும் எனவும் பழவேற்காடு லைட் வட சென்னை அனல் மின் நிலையம் காட்டுப்பள்ளி வரை சாலை அமைக்காமல் இருபதுக்கு மேற்பட்ட மீனவ கிராம மக்கள் கடும் சிரமம் அடைந்து வருவதாகவும் அண்ணாமலைச்சேரி அரசு பள்ளியில்
மாணவர்களின் நலன் கருதி போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் ஜல் ஜீவன் திட்டத்தில் முறையாக ஊராட்சிகளில் குடிதண்ணீர் வருதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி