திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நரசிங்க மேடு பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர் கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளருமான பொன்னையன் வந்தார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன் இடம் சமூக வலைத்தளங்களில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பெண் தூய்மை பணியாளர் ஒருவரை சாப்பிடும் இடத்தில் தூரே சென்று அமருமாறு கூறியது தொடர்பாக நடைபெறும் விவாதங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மு. க. ஸ்டாலின் எந்த அளவிற்கு ஏழை எளிய மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களை உதாசீனப்படுத்துகிறார், இழிவு படுத்துகிறார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என்றும், தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநரா சரியாக பாடாமல் விட்டார், ஆளுநர் பாடி தவறு செய்தால் அவரைக் கேட்கலாம் யாரோ பாடியதற்கு ஆளுநரை ஏன் கேள்வி கேட்க வேண்டும் என்றும், அதிமுகவின் வாக்கு வங்கி குறைந்து விட்டதாக ஓபிஎஸ் கூறியது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு கருணாநிதியின் படத்தை பூஜை அறையில் வைத்து கடவுளாக அவரது குடும்பத்தினர் வணங்கியதாக சட்டமன்றத்திலேயே கூறியவர் ஓபிஎஸ் எனவும், ஓபிஎஸ்ஐ அதிமுகவினர் காரி துப்புவதாகவும், அவரையும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமான சசிகலாவையும் கட்சியில் சேர்த்தால் இருக்கின்ற வாக்கும் குறைந்துவிடும் என காட்டமாக பொன்னையன் தெரிவித்தார்.