இலையை வைத்து விட்டு காக்க வைப்பதா? தொண்டர்களால் பரபரப்பு

75பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் பா சுகுமாரன் ஏற்பாட்டில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி ஜே கோவிந்தராஜன் மீஞ்சூர் ஒன்றிய முன்னாள் பொறுப்பாளர் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் கேஜி பாஸ்கர் சுந்தரம் ஒன்றிய செயலாளர் மணிபாலன் மாவட்ட மீனவரணி ஆறுமுகம் சிலம்பரசன் பழவேற்காடு நூர் ஜெயபால் கருணாகரன் மாவட்ட கவுன்சிலர் தேசப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் மாவட்டச் செயலாளர் இந்த கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோதே அனைவரும் எழுந்து சென்று உணவருந்தும் கூடத்தில் சாப்பிட அமர்ந்தனர் பல மணி நேரம் சாப்பிடுவதற்கு உட்கார்ந்து இலை போட்டு தண்ணீரை தெளித்துவிட்டு உணவு பரிமாறாததால் கடுப்பான கட்சி தொண்டர்கள் உணவு பரிமாறுபவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் அப்போது கொதிப்படைந்த கட்சித் தொண்டர் ஒருவர் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து பிரச்சனை செய்தார் இதனால் அங்கு தள்ளு முள்ளும் வாக்குவாதமும் ஏற்பட்டது. கட்சியை விட சோறு முக்கியம் நிகழ்வாக இது அமைந்தது இதை பேசிக் கொண்டிருந்த மாவட்ட கழக செயலாளர் கோவிந்தராஜன் கட்சி என்றால் சண்டை இருக்கத்தான் செய்யும் எங்களுக்குள் பின்னர் பேசி சரியாகி விடுவோம் என்று பேசி சமாளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி