திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டிடங்கள் கட்ட சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் உயர்நீதிமன்ற நீதிபதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த பணிகளை பொன்னேரி மாவட்ட கூடுதல் நீதிபதி கிருஷ்ணசாமி, முதன்மை சார்பு நீதிபதி சரிதா, கூடுதல் சார்பு நீதிபதி பிரேமாவதி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வண்ணமலர், குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகள் சரண்யா செல்வம், ஐயப்பன் ஆகியோர்
ஆய்வு செய்தனர் பின்னர் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது பின்னர் நீதிமன்றம் அமைய உள்ள வளாகத்தில் நீதிபதிகள் மரக்கன்றுகளை நட்டனர்
இந்நிகழ்ச்சியில் பார் அசோசியேஷன் தலைவர் தேவேந்திரன், பொருளாளர் கிரிபாபு, லாயர் அசோசியேஷன் தலைவர் ரமேஷ், செயலாளர் சுரேஷ், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீதர், நேதாஜி ஸ்ரீதர், மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். கட்டிடம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் ஒப்பந்ததாரர் தீன தயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.